

வடமேற்கு தில்லியின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி உள்பட மூவர் பலியாகினர்.
ஆதர்ஷ் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 5வது மாடியில் அஜய் விமல் கும்பத்துடன் வசித்து வந்தார். மின்கசிவு காரணமாக அவர் வசித்துவந்த குடியிருப்பில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
உயிரிழந்தவர்கள் தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய அஜய் விமல் (45), அவரது மனைவி நீலம் (38) மற்றும் மகள் ஜான்வி (10) என அடையாளம்காணப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடல்களை மீட்பு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.