

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் அனுமன் சிலையை, நாய் ஒன்று சுமார் 4 மணிநேரத்துக்கும் மேலாக சுற்றியவாறு வழிபாடு செய்துள்ள நிகழ்வு பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியிலுள்ள பழமை வாய்ந்த அனுமன் கோயில் அமைந்துள்ளது. பண்டிகை நாள்களையொட்டி இக்கோயிலுக்கு அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கோயில் வளாகத்திலுள்ள அனுமன் சிலையை அப்பகுதியிலுள்ள நாய் ஒன்று அனுமன் சிலையை சுற்றிவந்து வழிபாடு செய்தது. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் இதனை வியப்புடன் கண்டுரசித்தனர்.
சுமார் 4 மணிநேரமாகத் தொடர்ந்து அனுமன் சிலையை சுற்றி வந்து நாய் வழிபட்டது, பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனை கோயிலுக்கு வந்திருந்த பக்தர் ஒருவர் விடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.