தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

35 ஆண்டுகளுக்குப் பிறகு..! கேரளத்தில் பெண் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் நியமனம்!

கேரளத்தில் சட்டப்பேரவைத் துணைத் தலைவராக ஷானிமோல் உஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

 Shanimol Usman

கேரள சட்டப்பேரவைத் துணைத் தலைவராக ஷானிமோல் உஸ்மான் நியமனம்... - ENS

Published On :

கேரளத்தில், சட்டப்பேரவைத் துணைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஷானிமோல் உஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தில், புதியதாகப் பதவியேற்றுள்ள முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, கேரள சட்டப்பேரவைத் தலைவராக திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் கடந்த சில நாள்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார்.

இதையடுத்து, கேரள சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஆரூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஷானிமோல் உஸ்மான் மற்றும் இடதுசாரிக் கூட்டணி சார்பில் பட்டாம்பி சட்டப்பேரவை உறுப்பினர் முகமது முஹ்சின் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதையடுத்து, இன்று (ஜூன் 2) நடைபெற்ற சட்டப்பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தலில் முஹ்சின் 34 வாக்குகள் பெற்ற நிலையில், ஷானிமோல் உஸ்மான் 99 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இதன்மூலம், சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள சட்டப்பேரவையின் துணைத் தலைவாராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Summary

In Kerala, Shanimol Usman has been appointed as the Deputy Speaker of the Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.