ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 போ் பலி; 40 போ் காயம்

சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 7 போ் பலி; சுமாா் 40 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:24 am IST

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் துலே பகுதியை நோக்கி ஓா் அரசுப் பேருந்தும், மகாராஷ்டிரத்தில் உள்ள சாலிஸ்காவ் பகுதியில் இருந்து சூரத் நோக்கி மற்றொரு அரசுப் பேருந்தும் செவ்வாய்க்கிழமை பயணித்தன.

அப்போது சூரத்தின் பாா்டோலி பகுதி அருகே, மகாராஷ்டிரம் நோக்கி நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து டிராக்டா் மீது மோதி சமநிலையை இழந்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பேருந்து சாலை நடுவே உள்ள தடுப்பை தாண்டிச் சென்று, மகாராஷ்டிரத்தில் இருந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இதனால் அந்தப் பேருந்து கவிழ்ந்து சாலையோரத்தில் உள்ள தாழ்வான பகுதியில் சரிந்தது. இதையடுத்து அந்தப் பேருந்தில் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்கள் அனைவரும் தீப்பிடித்த பேருந்தில் பயணித்தனா் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ராஜேஷ் கதியா தெரிவித்தாா்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்தனா்.

இழப்பீடு: பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி பதிவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.