உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புதுவையில் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்வு!

புதுவையில் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டது பற்றி...

Puducherry Chief Minister Rangasamy

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Published On :

புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.

முதல்வராக என். ரங்கசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

என்.ஆர். காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியாக புதுவையில் 21 முதல் 55 வயது வரையிலான, அரசின் இதர மாதாந்திர நிதியுதவிகள் எதையும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகை ரூ. 1,000 -ல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் திட்டத்தை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறும் இத்திட்டத்திற்கு ரூ.16.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Summary

Women's Assistance Allowance in Puducherry Raised to ₹2,500!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.