டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சிபிஎஸ்இ-ஓஎஸ்எம் குளறுபடி: வெளிக்கொணர்ந்த இளைஞருக்கு ராகுல் பாராட்டு

சிபிஎஸ்இ தேர்வுகளில் குளறுபடிகளை வெளிக்கொணர்ந்த இரு இளைஞர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி பாராட்டு

Rahul Gandhi | Sarthak Siddhant

ராகுல் காந்தி | சர்காத் சிதாந்த் - X | Rahul Gandhi

Published On :

சிபிஎஸ்இ தேர்வுகளில் குளறுபடிகளை வெளிக்கொணர்ந்த இரு இளைஞர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என சர்காத் சிதாந்த், நிசார்கா அதிகாரி இரண்டு இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவால் சர்காத் அழைக்கப்பட்டு, அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும், சர்காத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிபிஎஸ்இ அதிகாரிகள், மறுமதிப்பீட்டு இணையதளச் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், விண்ணப்பிக்க மாணவர்களுக்குப் போதுமான அவகாசம் உள்ளதாகவும் உறுதியளித்தனர்.

இந்த நிலையில், இந்த துணிச்சலான கேள்விகளுக்காக சர்காத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "சர்தாக்குக்கு 18 வயதுதான் ஆகிறது. ஆனால், அவரும் அவரது நண்பர் நிசார்காவும் நாட்டின் பெரிய ஊடகங்களும் புலனாய்வாளர்களாலும் செய்ய முடியாதவற்றைச் செய்துள்ளனர்.

இவர்கள்தான் சிபிஎஸ்இ-க்கும் கோயெம்ப்ட்-க்கும் இடையிலான தொடர்பை நாட்டுக்கு அம்பலப்படுத்தினர்.

நம் இளைஞர்கள் ரீல்களில் மூழ்கிக் கிடக்கவும், பக்கோடா செய்யவும்தான் விரும்பினார்; கேள்விகள் கேட்கவோ கண்களைத் திறக்கவோ அவர் விரும்பவில்லை. ஆனால், இந்த இரு சிறுவர்களும் கேள்விகள் கேட்டனர்.

இந்த 18 வயது சிறுவன், சிபிஐ-யைவிட முன்னேறியுள்ளான். உண்மையில் இளைஞர்களின் இந்த வெற்றி, அரசாங்கத்தின் தோல்வி.

இதுதான் இந்தியாவின் உண்மையான ஆர்வமுள்ள, விழிப்புணர்வுள்ள இளைஞர் சக்தி. இனி இந்த நாட்டின் எந்த மோசடியாலும் பாதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Rahul Gandhi Lauds 18-year-old Sarthak For Exposing CBSE-OSM Discrepancies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.