பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாநிலங்களவை தேர்தல்: வைத்தியநாத் ராம் வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்டில் முன்னாள் அமைச்சர் வைத்தியநாத் ராம் வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி..

JMM candidate Baidyanath Ram

வைத்தியநாத் ராம் - x.com

Published On :

ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பைத்தியநாத் ராம் திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் பல அமைச்சர்களின் முன்னிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் அவர் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

சட்டப்பேரவைச் செயலாளர் ரஞ்சித் குமாரிடம் வேட்புமனுக்கள் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜேஎம்எம்-யின் இணை நிறுவனர் ஷிபு சோரனின் மறைவைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள மாநிலங்களவை இடங்களுள் ஒன்று காலியானது. மற்றொரு இடம் பாஜக உறுப்பினர் தீபக் பிரகாஷின் ஆறு ஆண்டு பதவிக்காலம் ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மாநிலங்களைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 1 தொடங்கி நிலையில், ஜூன் 8 (இன்று) வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். வாக்குப்பதிவு ஜூன் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. வெற்றிபெற, ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 28 வாக்குகளைப் பெற வேண்டும்.

Summary

Former minister Baidyanath Ram on Monday filed his nomination as a Jharkhand Mukti Morcha (JMM) candidate for one of the two Rajya Sabha seats in the state going to polls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.