மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சில நாள்களுக்குப் பிறகு, ஹரியாணா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வேலை செய்து வந்த விருந்துநிலை ஆசிரியை சுலேகா தலால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஆசிரியை சுலேகா தலால், "இது ஒரு போராட்டம்; இம்முறை இது வாழ்வா சாவா போராட்டம். இப்போது கரப்பான்பூச்சியின் தாய் களத்தில் இறங்கிவிட்டாள். நாம் நம் பிள்ளைகளுடன் இருக்கிறோம்” என்று ஆவேசமாகப் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து, ஆசிரியை சுலேகா தலால்-ஐ ஜூன் 8 முதல் இடைநீக்கம் செய்வதற்கான உத்தரவை ரோத்தக் மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்தார். இருப்பினும், அந்த உத்தரவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் நடைபெற்ற குளறுபடிகள் போன்றவற்றைக் காரணம் காட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
சுமார் 7,000 மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் அவர்கள் வைத்த கோரிக்கைகள் அரசியல் களத்தில் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
A teacher has been suspended for participating in a protest at Delhi's Jantar Mantar demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாஜக தொண்டருக்கு பதவியைவிட நாடும் இளைஞர்களும்தான் முக்கியம்: அமித் ஷா
தா்மேந்திர பிரதான் ராஜிநாமா நோ்மையின் உயா் தரத்தைப் பிரதிபலிக்கிறது: நிதின் நபின்

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke
பள்ளி வகுப்பறையில் முதல்வா் நிகழ்ச்சி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi




