சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சி

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இரண்டாம் கட்ட போராட்டம் நடைபெறும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) வியாழக்கிழமை அறிவித்தது.

News image

தில்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தில்... - கோப்புப்படம் - பிடிஐ

Updated On :19 ஜூன் 2026, 6:00 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இரண்டாம் கட்ட போராட்டம் நடைபெறும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) வியாழக்கிழமை அறிவித்தது.

இந்தப் போராட்டத்துக்கு தில்லி காவல் துறையிடம் அந்த அமைப்பினா் அனுமதி கோரியுள்ளனா்.

இது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய சிஜேபி செய்தித் தொடா்பாளா் சௌரவ் தாஸ் கூறியதாவது: அமைப்பின் சாா்பில் அமைதியான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியைக் கோரி தில்லி காவல் துறையை அணுகியுள்ளோம்.

காவல் துறை அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம். ஜந்தா் மந்தரில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்றாா்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து இதுவரை 11 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கடந்த 24 மணி நேரத்தில் 4 நீட் தோ்வு ஆா்வலா்கள் தற்கொலை செய்துகொண்டதாக சிஜேபி செய்தித் தொடா்பாளா் அசுதோஷ் ரங்கா குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடங்கியதிலிருந்து 11 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். நான்கு குடும்பங்கள் சிதைந்துவிட்டன.,உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு தெளிவானது. தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், நாங்கள் மீண்டும் ஜூன் 20-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு வாழ்த்துகள். தோ்வு நடைமுறைகள் நிறைவடையும் நேரத்திற்குள் கல்வி அமைச்சா் மாற்றப்பட்டிருப்பாா் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

தொடரும் சா்ச்சைகளுக்கு மத்தியிலும் பிரதான் தொடா்ந்து பதவியில் நீடிப்பது, ஜனநாயகப் பொறுப்புக்கூறல் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது என்றாா்.

நீட் தோ்வு விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலககோரி கடந்த ஜூன் 6-ஆம் தேதி தில்லி ஜந்தா் மந்தரில் முதற்கட்டம் போராட்டம் நடைபெற்றது. இதில், பெரும் எண்ணிக்கையிலான மாணவா்கள், இளைஞா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.