சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாகாலாந்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு!

நாகாலாந்தின் ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்றுள்ளது குறித்து...

News image
நாகாலாந்தின் ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு...- எக்ஸ்/Bihar BJP
Updated On :13 மார்ச் 2026, 10:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாகாலாந்து மாநிலத்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்றுள்ளார்.

நாகாலாந்தின் 23 ஆவது ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, குவாஹட்டி உயர்நீதிமன்ற நீதிபதி அஷுதோஷ் குமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, அம்மாநில சட்டப் பேரவைத் தலைவர் ஷாரின்கையின் லோங்குமர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நாகாலாந்தின் முன்னாள் ஆளுநர் இல.கணேசன் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் காலமானார். பின்னர், மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்தின் ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார்.

இதையடுத்து, பிகாரைச் சேர்ந்தவரும், பாஜகவின் முக்கிய தலைவருமான அஷுதோஷ் குமார் முதல்வர் நிதீஷ் குமார் அரசின் சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்து வந்துள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இடமாற்றம் செய்தவுடன் நாகாலாந்தின் புதிய ஆளுநராக அஷுதோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.