கேரளத்தில் பெண் எம்.எல்.ஏ.வை மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் செரியன் பிலிப் கட்டியணைக்க முயன்ற விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கொல்லம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற பிந்து கிருஷ்ணா, தலைமை அலுவலகத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகைப்புரிந்தபோது, அங்கிருந்தவர்கள் கைகுலுக்கி அவரை வரவேற்றனர். ஆனால், செரியன் பிலிப் அவரைக் கட்டியணைக்க முயன்றார்.
இதனை விரும்பாத பிந்து, அவர் கட்டியணைக்க முயன்றதைத் தடுத்து கைகூப்பி வணங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்துச் சென்றார். இந்த விடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், முதல்வர் பதவியில் ரமேஷ் சென்னிதாலா, விடி சதீஸன், கேசி வேணுகோபால் என மூவரில் யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கவிருந்த கூட்டத்திற்கு வருகைப்புரிந்த பிந்து கிருஷ்ணாவை, கட்சி வாயிலில் இருந்த உறுப்பினர்கள் கைகுலுக்கியும் கைகூப்பியும் வரவேற்பளித்தனர்.
தலைமை அலுவலக கட்டடத்தை நோக்கிச் சென்றபோது வாயிலில் இருந்த மூத்த தலைவர் செரியன் பிலிப், பிந்து கிருஷ்ணாவை கட்டியணைக்க முயற்சித்துள்ளார்.
பொதுவெளியில், கட்சித் தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள் முன்பு கட்டியணைக்க முயன்ற செரியனை தள்ளிவிட்டு பிந்து கிருஷ்ணா கைகூப்பி அங்கிருந்து நகர்ந்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மரியாதை நிமித்தமாகவே இருந்தாலும், பெண் விரும்பாதபோது அவரைக் கட்டியணைக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Congress Leader Cherian Philip Tries To Hug MLA Bindhu Krishna In Public
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்

பெண் MLAவைக் கட்டிப்பிடிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்!காணொலி வைரல்!

தவெக தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தலைவர்கள்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

