நாட்டின் வெற்றிக் கதைகளை உலகறியச் செய்யுங்கள்! ஊடகங்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்!
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி பேசியது பற்றி..

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி - X
நாட்டின் வெற்றிக் கதைகளை உலகறியச் செய்யுமாறு ஊடகங்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி மிலன் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
பல்வேறு துறைகளில் தனது அரசாங்கம் அடைந்துள்ள சாதனைகளை எடுத்துரைத்த அவர், இந்தியா நிச்சயமாக வளர்ந்த நாடாக மாறும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாட்டில் வறுமையை ஒழிக்கச் செயல்பட்டுள்ளதாகவும், 50 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கங்கள் இருந்தன. ஆனால், இந்த அரசாங்கம் அதை ஒழித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் இத்தகைய நிகழ்வுகளில் நாற்காலிகளை அடுக்கி வைக்கும் பணியைச் செய்து வந்த காலத்திலிருந்தே ஊடகங்களுடன் தனக்கு நீண்டகாலத் தொடர்பு இருப்பதாக மோடி கூறினார்.
நான் ஊடகங்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். செய்தி அறிக்கைகள் மட்டுமே இருந்த காலத்திலிருந்து, இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காலம் வரை ஊடகங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்ததைக் கண்டுள்ளேன்.
செய்தி உலகில் சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை, நெருக்கடி மற்றும் பேரிடர் காலங்களிலும் களப்பணியாளர்கள் அனைத்து இடங்களுக்கும் சென்றடைகிறார்கள் என்று ஊடகங்களைப் பிரதமர் பாராட்டினார்.
மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்திய ஊடகங்கள் நாட்டின் வெற்றிக் கதைகளை முன்னிலைப்படுத்திச் செயல்பட வேண்டும். இத்தகைய பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


