ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டைக் கடித்த நபர் பலி! ம.பி.யில் பரபரப்பு!
மத்திய பிரதேசத்தில் ரசகுல்லா எனக் கூறி கொடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டைக் கடித்த நபர் பலியானது பற்றி...

கோப்புப்படம்.
மத்திய பிரதேசத்தில் ரசகுல்லா எனக் கூறி கொடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டைக் கடித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மத்திய பிரதேச மாநிலம், டிண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பராட்டியா. இவர் நவம்பர் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது ராம்பகத் பராட்டியா அங்கு வந்துள்ளார்.
இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவரிடம் ரசகுல்லா எனக் கூறி நாட்டு வெடிகுண்டை ராம்பகத் கொடுத்துள்ளார். ராஜேந்திரா அந்தப் பொருளை வாயில் வைத்துக் கடித்ததும், அது பயங்கரமாக வெடித்தது.
வெடிச்சப்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை ஆட்டோ ரிக்ஷாவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்" என்று ராஜேந்திராவின் மனைவி சுசீலா பாய் தெரிவித்தார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்தனர். கோட்வாலி காவல் அதிகாரி துர்கா பிரசாத் நாக்பூரே கூறுகையில், ராம்பகத் மற்றும் மற்றொரு நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இருள் சூழ்ந்திருந்ததால், தன்னிடம் கொடுக்கப்பட்டது ரசகுல்லாவா அல்லது வெடிகுண்டா என்பதை ராஜேந்திராவால் சரியாக அடையாளம் காண முடியவில்லை என்று நாக்பூரே கூறினார். அதைக் கடித்த அடுத்த நொடியே வெடிகுண்டு வெடித்தது என்று அவர் தெரிவித்தார்.
விசாரணையின்போது, ஒரு சிறுவன் தன்னிடம் இந்த வெடிகுண்டைக் கொடுத்ததாக ராம்பகத் கூறியதாகத் தெரிகிறது. அந்தச் சிறுவனையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கும் பாதிக்கப்பட்டவரின் அக்கம் பக்கத்தினருக்கும் இடையே ஏதேனும் தனிப்பட்ட பகை இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Police reached the spot after receiving information about the incident. Kotwali police station in-charge Durga Prasad Nagpure said they have detained accused Ram Bhagat along with another person.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


