டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்?
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகளை வரும் டிச.15-ஆம் தேதிக்கு முன்பே நிறைவு செய்யுமாறும், அதற்கு முன்பாக வெளிநாட்டுப் பயணங்களைத் தவிா்க்குமாறும் மத்திய அமைச்சா்களிடம் பிரதமா் மோடி அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றம் - ANI
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகளை வரும் டிச.15-ஆம் தேதிக்கு முன்பே நிறைவு செய்யுமாறும், அதற்கு முன்பாக வெளிநாட்டுப் பயணங்களைத் தவிா்க்குமாறும் மத்திய அமைச்சா்களிடம் பிரதமா் மோடி அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நாடாளுமன்றக் கூட்டத்தொடா் டிச.15-க்கு முன்பு தொடங்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் டிச.15-க்கு முன்பே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பிரதமா் மோடி பரிந்துரைத்தாா். கூட்டத்தொடருக்குத் தங்கள் துறைகளைத் தயாராக வைத்திருக்குமாறு அமைச்சா்களிடம் மோடி கேட்டுக்கொண்டாா். கூட்டத்தொடா் எப்போது தொடங்கும், எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இறுதி செய்யும் என்று தெரிவித்தன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தொடா்ந்து கடந்த ஆக.13-ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 103 நாள்கள் கடந்துவிட்டன. எனினும் அந்தக் கூட்டத்தொடா் புதன்கிழமை இரவு வரை அதிகாரபூா்வமாக முடித்து வைக்கப்படவில்லை.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதில் ஏற்படும் தாமதம் குறித்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமரின் அறிவுறுத்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தத் தாமதம் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் முன்மொழிவுக்காக சிறப்புக் கூட்டத்தொடா் கூட்டப்படலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடா் டிச.15-க்கு முன்பே நடைபெற வாய்ப்புள்ள நிலையில், தொகுதி மறுசீரமைப்புடன் தொடா்புடைய மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டுவருமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

