மே. வங்கத்துக்கு ரூ.1 லட்சம் கோடியில் சாலை வளர்ச்சி! - மத்திய அரசு தகவல்!
மேற்கு வங்கத்துக்கு விரைவில் ரூ. 1 லட்சம் கோடியில் சாலை வளர்ச்சித் திட்டங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு...

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - கோப்புப் படம்
மேற்கு வங்கத்துக்கு விரைவில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அரசு வழங்கவுள்ளதாக, முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூரின் கோலாகாட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் சுவேந்து அதிகாரி, அம்மாநிலத்துக்கு ரூ. 25,000 கோடி மதிப்பீட்டிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அரசு இன்று (நவ. 26) வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட வேண்டிய சாலைகள் மற்றும் பாலங்களின் கட்டுமானத் திட்டங்களைக் கருத்தில் கொள்ளுமாறு மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் வலியுறுத்திய முதல்வர் சுவேந்து அதிகாரி, அந்தத் திட்டங்களுக்குத் தேவையான நிலத்தை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“மேற்கு வங்கம் இன்று ரூ. 25,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் திட்டங்களைப் பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பீட்டில் சாலை வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு வழங்கவுள்ளது. மாநிலத்தில் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதுதான் நமது நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, மேற்கு வங்கத்துக்கு ரூ. 35,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டிலான சாலை வளர்ச்சித் திட்டங்கள் விரைவில் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
CM Suvendu Adhikari has stated that national highway projects worth Rs 25,000 crore have been sanctioned for West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


