தேசியக் கொடியுடன் சிஜேபி இன்று போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
தில்லியில் சிஜேபி-யினர் இன்று போராட்டம் நடத்துவது குறித்து...
கன்னாட் பிளேஸ் பகுதியில் பலத்த பாதுகாப்பு - ANI
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை (அக்.16) நடத்தத் திட்டமிட்டுள்ள போராட்டத்தை முன்னிட்டு, தில்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தில்லியில் போராட்டம் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் புதன்கிழமையில் (அக். 14) திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்தார்.
மேலும், கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பாா்க்கில் நடைபெறும் ‘லேஹ்ரா தோ திரங்கா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் தேசியக் கொடியுடன் பங்கேற்குமாறு அபிஜீத் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் போராட்டத்தை முன்னிட்டு, கன்னாட் பிளேஸ் மற்றும் ஜந்தா் மந்தா் ஆகிய இடங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், கன்னாட் பிளேஸ் என்பது போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அல்ல என்று மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பெரியார் அறிவுலகம்! திறந்து வைப்பதில் என்ன பெருமை, உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை: மு.க.ஸ்டாலின்
Summary
CJP Founder Abhijeet Dipke has called for a ‘Lehra Do Tiranga’ protest at Connaught Place’s Central Park today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

