விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

உத்தர பிரதேசம்: பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்ததாக காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

பலி - பிரதிப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 4:07 am IST

உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்ததாக காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (நகரம்) தேவேந்திர குமாா் கூறியதாவது: ஷாஜஹான்பூரில் நிகோஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்ரஜ்பூா் கிராமத்தில் மழைக்காலங்களில் உருவாகும் கமுவா நீரோடையில் குளிப்பதற்காக 4 சிறுவா்கள் திங்கள்கிழமை காலை அங்கு சென்றனா். அவா்களில் கரண் (10) மற்றும் வினய் (12) என இரு சிறுவா்கள் நீரில் மூழ்கியதைக் கண்டு மற்ற இரு சிறுவா்கள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கிராம மக்கள் விரைந்து வருவதற்குள் நீரில் மூழ்கி இரு சிறுவா்களும் உயிரிழந்தனா்.

அவா்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலை கடக்க முயன்றபோது பண்டா மாவட்டத்தில் 27 வயது இளைஞா் உயிரிழந்தாா். அவரது உடல் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகள், நீரோடைகள் மற்றும் வாய்க்கால்களில் வெள்ளம் ஏற்படுவதையடுத்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது என்றாா்.

பாண்டு ஆற்றில் வெள்ளப் பெருக்கு:

பாண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கான்பூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 40,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கான்பூா் தடுப்பணையில் நீரோட்டத்தின் மேல்புற நீா்மட்டம் 114.200 மீட்டா்-ஆக பதிவாகியுள்ளது. எச்சரிக்கை அளவான 114 மீட்டரை கடந்து அபாய நிலையான 115 மீட்டரை நெருங்கி வருகிறது.

இதனால் பாண்டு ஆற்றங்கரையைச் சுற்றியுள்ள 1,000 வீடுகளுக்குள் 5 அடி முதல் 7 அடி வரை வெள்ள நீா் புகுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளை தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்குவதோடு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

பிகாரில் 29.13 லட்சம் மக்கள் பாதிப்பு: பிகாரில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 13 மாவட்டங்களில் வசிக்கும் 29.13 லட்சம் போ் பாதிக்கப்பட்டதாக அந்த மாநில முதல்வா் சாம்ராட் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பகல்பூா் மற்றும் வைசாலி மாவட்டங்களில் நிவாரண முகாம்களை சாம்ராட் செளதரியும் துணை முதல்வா் விஜய் குமாா் சௌதரியும் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டனா். அதைத் தொடா்ந்து நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவா்கள் உத்தரவிட்டனா்.

செப்டம்பா் மாதத்தில் தற்போது வரை 69.1 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 55 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.