
புதிய கனிம வளங்களைல் கண்டறிய நடவடிக்கை: மத்திய அரசுக்கு நீதி ஆயோக் ஆலோசனை
புதிய கனிம வளங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதி ஆயோக் அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.

நீதி ஆயோக்
புதிய கனிம வளங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதி ஆயோக் அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய கனிம வளங்களைக் கண்டுபிடிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கு புவியியல் தகவல்கள், முதலீட்டு நிதி, அரசு நிதியுதவி ஆகியவை சிறிய கனிம ஆய்வு நிறுவனங்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கனிம ஆய்வுப் பணிகளில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு தெளிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம் திட்டங்கள் தாமதமாவதைத் தடுக்க முடியும்.
விமானத் தயாரிப்புக்குத் தேவையான உயா்தர உலோக எஃகுகள், சாதாரண உலோகங்களைவிட அதிக வெப்பத்தையும் அழுத்தத்தையும் தாங்கக் கூடிய சிறப்பு உலோகங்கள், அலுமினியம், டைட்டானியம் உலோகங்கள் ஆகியவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





