
இந்தியாவுக்கு ஆபத்தே இந்து வலதுசாரி வகுப்புவாதம்தான்! நேருவின் கருத்தை சுட்டிக்காட்டிய ஹமீது அன்சாரி!
நேருவின் கருத்தை சுட்டிக்காட்டிய ஹமீது அன்சாரிக்கு பாஜக கண்டனம்...

ஹமீது அன்சாரி - ANI
இந்தியாவுக்கு ஆபத்து என்பது கம்யூனிசம் அல்ல, இந்து வலதுசாரி வகுப்புவாதம்தான் என்று நேரு கூறிய கருத்தை மேற்கோள்காட்டி குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி பேசியுள்ளார்.
எழுத்தாளர் ஏ.ஜி. நூரானியை நினைவுகூரும் வகையில் இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் ஹமீத் அன்சாரி கலந்துகொண்டார். அப்போது, 2019 ஆம் ஆண்டு வெளியான நூரானியின் ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவுக்கான அச்சுறுத்தல்’ என்ற புத்தகத்தை பற்றி அன்சாரி பேசினார்.
இந்த நிகழ்வில், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பேசும்போது, “இந்தியாவுக்கு ஆபத்து என்பது கம்யூனிசம் அல்ல, இந்து வலதுசாரி வகுப்புவாதம்தான்” என்று தெரிவித்ததாக அன்சாரி குறிப்பிட்டார்.
ஹமீத் அன்சாரியின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சிலர் தங்கள் பதவிக்கான கண்ணியத்தைக் காக்கத் தவறிவிடுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் ஹமீது அன்சாரி. இருப்பினும் அவர் ஒரு துரதிர்ஷ்டவசமான கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது கருத்துகள் இந்தியாவுக்கும் இந்தியப் பாரம்பரியத்துக்கும் ஆபத்தானவை.
இந்தக் கருத்து, இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் பரப்பப்படும், உலக அளவில் இந்தியாவின் பிம்பத்தைக் கெடுக்கும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஹிந்துக்களை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்த முற்பட்டுள்ளார்” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Summary
Hindu right-wing communalism is the real danger to India! Hamid Ansari points to Nehru's view
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





