'என்னப்பா ராப்பிச்சை... ஆறு மணிக்கே வந்துட்டே?'
'இன்னும் கொஞ்சம் லேட்டானால், நீங்க சீரியலில் பிசியாகி விடுவீங்களேன்னுதான், தாயி!'
பட்டத்தம்மாள் கிருஷ்ணன், நமசிவாயபுரம்.
'விருந்தாளிங்க அனுப்பிய அடுத்த மாச டூர் ப்ரோக்ராமை பார்த்து மகிழ்ச்சி!'
'என்ன மகிழ்ச்சி?'
'நம்ம வீடு அதுல இடம் பெறல!'
ஏ. நாகராஜன், பம்மல்.
'நடு ராத்திரியிலும் கிளினிக்கை தொறந்து வெச்சு டோக்கன் குடுக்குறீங்களே?'
'டாக்டருக்கு தூக்கத்துல கன்ஸல்டேஷன் பண்ற வியாதி இருக்குதே?'
எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.
'ஆபரேஷன் பேஷண்ட்டை எங்க காணோம்?'
'கடைசி நேரத்துல சிறு காயத்தோட தப்பிச்சு ஓடிட்டார், டாக்டர்!'
அ.ரியாஸ், சேலம்.
'புறமுதுகுப் பாதையில் நிற்கும் ஆட்டோவில் ஏறித் தப்பிப் போகாமல் மன்னர் ஏன் கால் வலிக்க ஓடுகிறார்?'
'அந்த ஆட்டோவின் பின்னால் 'கோழைகளுக்கு இலவசம்' என்று எழுதப்பட்டிருந்ததாம்!'
'பர்வீன் யூனுஸ், சென்னை.
'உன்னை வானளாவ புகழ முடியல... சீலிங் இடிக்கும்.'
'அப்படின்னா மொட்டை மாடியேறி நின்று புகழ்!'
பர்வதவர்த்தினி, பம்மல்.
'அந்த சாமியார் கையில காந்தத்துடன் காட்சியளிக்கிறாரே, ஏன்?'
'பக்தர்களைக் கவர்ந்து இழுக்கத்தானாம்..!'
'அரசர் பகலில் நகர்வலம் போகிறாரே, ஏன்?'
'இருட்டு என்றால் அரசருக்கு அலர்ஜியாம்!'
மஞ்சுதேவன், பெங்களூரு.
'வர்ற தேர்தல்ல வேட்பாளரா நிக்கிறதே தற்கொலை முயற்சின்னு ஏன் சார் சொல்றீங்க?'
'எதோ பஜ்ஜி சுட்டு, டீ போட்டு ஓட்டுக் கேட்டா பரவாயில்ல.... பனை மரம் ஏறு, தென்னை மரம் ஏறுன்னா ஆகற காரியமா?'
'தள்ளு வண்டியில காய்கறி விக்கிறவங்க அநியாயத்துக்குப் பொய் சொல்றாங்க...'
'என்னடா சொல்றே?'
'நாட்டு தக்காளி, நாட்டு இஞ்சின்னு சொன்னா பரவாயில்ல... நேத்து ஒருத்தன் நாட்டு ஸ்ட்ராபெரின்னு சொல்லி விக்கிறான்!'
பண்ருட்டி பரமசிவம்
'மகாராணிக்கு 'வெஜிடபிள் கட்டர்' வாங்கிக் கொடுக்க வேண்டுமா... ஏன் மன்னா?'
'எனது வாளை அடிக்கடி 'சாணை' பிடிக்க வேண்டியிருக்கிறதே!'
'என்ன சார், சுண்டல் பாக்கியைக் கேட்டா கல்யாண பத்திரிகையை நீட்டுறீங்க?'
'எங்க கல்யாணத்துக்கு வந்துடு... மொய் எழுத வேண்டாம்!'
'அந்த வீட்டுல மட்டும் ஏன் முகமூடி போட்டு திருடினே?'
'அவர் ஒரு ஓவியர் எசமான்... என் முகத்தை வரைஞ்சி போலீஸ்ல கொடுத்துடக்கூடாதுன்னு தான்!'
பேகம்பூர் ஷம்மு, திண்டுக்கல்.
'கட்சி ஆபிசில் கல்யாணம் நடத்தியது ரொம்ப தப்பாப் போச்சு!'
'ஏன்?'
'கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் மொய்ப் பணம் கொடுக்காம மாப்பிள்ளைக்குத் துண்டு போட்டுப் போய்ட்டாங்க!'
'கல்யாண பொண்ணு ரொம்ப ஒல்லியா இருப்பா!'
'அப்ப ஒட்டியாணத்தை மாமியாருக்குப் போடுங்க!'
தீபிகா சாரதி, சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
