கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கிராமத்துக்குள் புகுந்த மான்: பாதுகாப்பாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை மாலை, கிராமத்திற்குள் வந்த ஆண் மானை பாதுகாப்பாக பிடித்து கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் கிராம மக்கள்

News image
Updated On :24 நவம்பர் 2012, 12:09 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை மாலை, கிராமத்திற்குள் வந்த ஆண் மானை பாதுகாப்பாக பிடித்து கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் கிராம மக்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் அருகேயுள்ள நரையன்குளம் கிராமத்திற்குள் சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை நாய் துரத்தி வந்துள்ளது. இதில் மிரண்டு ஓடிவந்த மான் கிராமத்தில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுடன் நின்றுள்ளது. இதில் மானின் ஒரு கொம்பு தனியே வந்தது. உடைந்த இடத்தில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த கிராம பெரியவர்கள் முனியாண்டி, கிருஷ்ணன், முத்தையா, பாலமுருகன், கோவிந்தன், வைரமுத்து உள்ளிட்டோர் மானை பாதுகாப்பாக பிடித்து கட்டி வைத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்க ஏற்பாடு செய்தனர். கிராம இளைஞர்கள் தீவிர முயற்சி எடுத்து மானை பிடித்தனர்.

வனத்துறையினருக்கு ஊர் பெரியவர்கள் தகவல் கொடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை. இது குறித்து மாவட்ட வன உயிரின பாதுகாப்பாளர் அசோக்குமாரிடம் நாம் தகவல் கொடுத்தோம். அவர் வனத்துறை அலுவலர்களுக்கு கூட்டம் நடப்பதாயும் வந்து கொண்டிருப்பதாயும் கூறினர். சுமார் ஒன்னறை மணி நேரம் கழித்து வந்த வனத்துறையினர் மானை பிடித்து வனச்சரக அலுவலகம் கொண்டு சென்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், மான் மிரண்டு போய் மோசமான நிலையில் இருந்தது. வனத்துறையினர் உடனடியாக வந்து அதனைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளாமல், மிகவும் அஜாக்கிரதையாக வந்தனர் என்றனர்.

வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட மானுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். பின்னர் மான் செண்பகத்தோப்பு வனப் பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.