கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்குச் சென்றது ஸ்ரீஆண்டாள் கோயில் யானை!

தமிழக அரசு நடத்தும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் யானை ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2012, 9:20 am

கோ.ஜெயக்குமார்

தமிழக அரசு நடத்தும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் யானை ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டது.

தமிழக அரசு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டியில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமை இம் மாதம் 27-ம் தேதி முதல் 41 நாட்களுக்கு நடத்துகின்றது.

இதில் கலந்து கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் 10 வயது பெண் யானை ஜெயமால்யா ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டது. கோயிலின் முன்பு இதற்காக அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் சன்னதி முன்பு, லாரி நிறுத்தப்பட்டது. யானை நிற்கும் இடத்திற்கும் லாரிக்கும் இடையே சுமார் 2 அடி உயரம் இருந்தது. இதனால் யானை மேலே ஏற அச்சப்பட்டு பயங்கர சப்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. காலை 10 மணி வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் யானை லாரியில் ஏறவில்லை.

கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் யானை பயந்து போய் உள்ளது. அதனை சற்று ஓய்வுக்கு அழைத்துச் சென்று வேறு இடத்தில் வைத்து லாரியில் ஏற்றுங்கள் என ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்து ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளியின் வழிபாட்டுக் கூட்டம் நடைபெறும் மேடையில் யானை ஏற்றப்பட்டு, லாரி மேடையை ஒட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் யானை சுலபமாக லாரியில் ஏறியது. இதனையடுத்து காலை 11 மணியளவில் யானை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

யானையுடன் கோயில் செயல் அலுவலர், மருத்துவக் குழுவினர், யானை பாகன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.