அவர் கூறியதாவது: டி.மானகசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்து பள்ளி குழந்தைகளை பரிசோதித்து தக்க மருந்துகள் ஆலோசனைகள் வழங்க வேண்டும். முன்பெல்லாம் மருத்துவக் குழுவினர் வந்து அடிக்கடி சிகிச்சை அளித்துச் செல்வார்கள். தற்போது இந்த நடைமுறையில்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செவிலியர் ஒருவர் வந்து, ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும் சிகிச்சை அளித்ததாக கூறிச் செல்கிறார்கள். தற்போது பள்ளியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்றாம் வகுப்பு மாணவி மகாலட்சுமி, ஒன்றாம் வகுப்பு மாணவி தங்கமதி ஆகியோர் பள்ளி வரவில்லை. தங்கமதியின் சகோதரி முத்துஇசக்கி ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. பொது சுகாதாரத் துறையினர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் நோய் வந்தால் கூட வந்து கிராமத்தில் தடுப்புப் பணியை பார்ப்பது கிடையாது என்றார்.