கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தற்கொலை செய்த இளம் பெண் உடலை எரித்த தந்தை உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மகளின் சடலத்தை போலீஸூக்குத் தெரியாமல்

News image
Updated On :28 நவம்பர் 2012, 2:56 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட மகளின் சடலத்தை போலீஸூக்குத் தெரியாமல் எரித்த தந்தை உள்ளிட்ட நால்வர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுரைக்காய்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்த பால்கோனார் மகள் முனீஸ்வரி (17). இவருக்கும் இவரது சகோதரி கஸ்தூரிக்கும் செவ்வாய்கிழமை வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமுற்ற முனிஸ்வரி தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரது சடலத்தை போலீஸாருக்குத் தெரியாமல் தந்தை அ.பால்கோனார், வே.முருகன், கா.கணேசன், ரா.நாகராஜ் ஆகியோர் ஆயர்தர்மம், சிறுகுளம் கண்மாய்கரையில் உள்ள மயானத்தில் எரித்துவிட்டார்களாம்.
இது குறித்து இலந்தைக்குளம், கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார். போலீஸார் தந்தை உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.