இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலை விபத்தில் இலங்கை அகதிகள் முகாம் வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெரியசாமி மகன் சுதர்சன் என்கிற ரோஷன். இவரும் அதே முகாமை சேர்ந்த சுப்பிரமணி மகன் சாந்தகுமார்(30) என்பவரும் வேலை விஷயமாக

News image
Updated On :2 ஆகஸ்ட் 2013, 10:20 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சுதர்சன்(30) பலியானார்.

கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெரியசாமி மகன் சுதர்சன் என்கிற ரோஷன். இவரும் அதே முகாமை சேர்ந்த சுப்பிரமணி மகன் சாந்தகுமார்(30) என்பவரும் வேலை விஷயமாக செங்குன்றம் பகுதிக்கு சென்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே பனப்பாக்கம் பகுதியில் இவர்கள் இருவரும் பைக்கில் முகாம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்களது பைக்கின் மீது மோதியது.

இந்த விபத்தில் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானார்.பைக் ஓட்டி வந்த சாந்தகுமார் பலத்த காயத்துடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கவரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.