கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திடீரென பிரேக் போட்டதால் கீழே விழுந்து பஸ் கண்டக்டர் சாவு: பயணி காயம்

சிதம்பரம் அருகே தனியார் பேருந்து பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் பஸ் கண்டக்டர் பஸ்ஸிலிருந்து கீழே விழுந்து படுகாயமுற்று இறந்தார். பயணி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2013, 11:50 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே தனியார் பேருந்து பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் பஸ் கண்டக்டர் பஸ்ஸிலிருந்து கீழே விழுந்து படுகாயமுற்று இறந்தார். பயணி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

காட்டுமன்னார்கோயிலிலிருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை காலை வந்தது. சிதம்பரம் அருகே பொன்னாங்கன்னிமேடு என்னுமிடத்தில் பன்றி குறுக்கே வந்ததால் டிரைவர் கண்ணன் (45) திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த புவனகிரி மிராளூரைச் சேர்ந்த கண்டக்டர் ராஜா (28) கீழே விழுந்து தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். பேருந்தில் பயணம் செய்த டி.நெடுஞ்சேரியைச் சேர்ந்த பார்த்தீபன் (21) பஸ்ஸுக்குள்ளேயே கீழே விழுந்தார். அவரது இடுப்பு முறிந்தது. இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கண்டக்டர் ராஜா தீவிர சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பயணி பார்த்தீபன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.