புத்தக கண்காட்சியில் ஸ்ரீராமகிருஷ்ண மடம், லியோ புத்தக விற்பனையாளர்கள், மீனாட்சி புத்தக நிலையம், கோவை டிஜிட்டல் மீடியா, திருமூலர் இயற்கை அங்காடி, ராம்கா புத்தகங்கள், பாரதி புத்தகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்புத்துறை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளன. வார நாட்களில் மாலை 3 மணி முதல் 8.30 மணி வரையும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழ்மை ஆகிய இருதினங்களில் பகல் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி வருகிற பிப்ரவரி 17-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தொடக்கநாளான வெள்ளிக்கிழமை அண்ணாமலைநகர் லீலா மெமோரியல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.