கடலில் மூழ்கி இளைஞர் சாவு! சாவில் சந்தேகம் என அண்ணன் போலீஸில் புகார்
சிதம்பரம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.


சிதம்பரம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.
சிதம்பரத்தை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் கார்த்திக் (20). இவர் தனது நண்பர்கள் வெங்கடேசன், நாராயணசாமி, சங்கர், ராமகிருஷ்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேருடன் புதன்கிழமை கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரைக்கு பகுதிக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது கார்த்திக் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீனவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளைஞர் கார்த்திக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் கார்த்திக்கின் அண்ணன் அசோக்ராஜ் தனது தம்பி சாவில் சந்தேகம் உள்ளதாக கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கிள்ளை போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...