கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

துணைவேந்தர், பதிவாளர் வீடு முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கத்தினர் திரண்டனர்

 பொங்கல் பண்டிகையான ஜன.14-ம் தேதி திங்கள்கிழமை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர்

News image
Updated On :15 ஜனவரி 2013, 3:22 am

ஜி.சுந்தரராஜன்

 பொங்கல் பண்டிகையான ஜன.14-ம் தேதி திங்கள்கிழமை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் நடத்தினர்..

பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்பிப்புத்தொகை, ஊழியர்களின் சேமநலநிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை, பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய  சலுகைகள் போன்றவற்றை தராமல் மறுத்து வருகிறது. இதனால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கரும்பொங்கலாக மாறிவிட்டது. எனவே இதனை அரசு கவனத்தில் ஈர்க்கும் வகையில் ஜன.14-ம் தேதி பொங்கல் தினமான திங்கள்கிழமை துணைவேந்தர் வீடு மற்றும் பதிவாளர் வீடு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கிள்ளைரவீந்திரன் உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருடன் வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தை முன்னிட்டு துணைவேந்தர் பாதுகாப்பு கோரி காவல்துறையினருக்கு புகார் அளித்திருந்ததால், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் வீடு முன்பு ஏஎஸ்பி எம்.துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட வந்த ஆசிரியர்கள், ஊழியர்களிடம் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி கிடையாது என தெரிவித்தும், அதை மீறி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். பின்னர் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதியளித்ததை அடுத்து துணைவேந்தர், பதிவாளர்கள் வீடுகள் முன்பு ஆசிரியர்கள், ஊழியர்கள் மிகப்பெரிய பாத்திரங்களை வைத்து தீ முட்டி கஞ்சி காய்ச்சி குடித்தனர். மேலும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.