கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே பஸ் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் சாவு; ஒருவர் கவலைக்கிடம்

சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் சிதம்பரம் மருத்துவமனையில்

News image
Updated On :18 ஜனவரி 2013, 6:34 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் சிதம்பரம் மருத்துவமனையில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே உள்ள வட்டத்தூர் தண்டேஸ்வரநல்லூர் பகுதியைச் சேர்ந்த சந்தியாகு. இவரது மூத்த மகன் அபினேசர் (16) பெங்களூரில் ஐடிஐ படித்து வருகிறார். இரண்டாவது மகன் அருள்பெர்ணாட்ஷா (17) சேத்தியாத்தோப்பு பள்ளியில் பிளஸ்டூ படித்து வருகிறார்.

அபினேசர், அருள்பெர்ணாட்ஷா மற்றும் விருத்தாசலம் வீரரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த வின்சென்ட் (37) ஆகிய மூவரும் சிதம்பரம் அருகே சிலுவைபுரம் சர்ச்சில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவரது பின்னால் மணலூர் எம்ஆர்வி நகரைச் சேர்ந்த ஸ்டீபன் (26) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது சிதம்பரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் தனியார் பேருந்து மோதியதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தூக்கி எரியப்பட்டு நால்வரும் காயமடைந்தனர். இவ்விபத்தில் அபினேசர், அருள்பெர்ணாட்ஷா ஆகிய இருவரும் மருத்துவமனை செலலும் வழியில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வின்சென்ட்  கவலைக்கிடமான நிலையில் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்டீபன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.