கால்நடை மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு
காட்டுமன்னார்கோயிலில் கால்நடை மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.


காட்டுமன்னார்கோயிலில் கால்நடை மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் அப்துல் ரகீம். சில தினங்கள் முன்பு இவர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ரேணுகாவின் கணவரும், அதிமுக பிரமுகருமான அசோகன் கீழக்கடம்பூரில் என்னை அழைக்காமல் இலவச ஆடுகளை ஏன் வழங்கினாய்? என கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யாமல் மருத்துவரை போலீஸார் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்தார். இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் அசோகன் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...