பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலக்காடு கிராமத்தில் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவவீரர் ஒருவரை சோழத்தரம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலக்காடு கிராமத்தில் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவவீரர் ஒருவரை சோழத்தரம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த அமுல்தாஸ் மனைவி ஜெயசிந்தாமேரி (28). இவர் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த விடுமுறையில் வந்துள்ள ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றும் தீபக்ராஜ் (28) வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது ஜெயசிந்தாமேரி கூச்சலிட்டதை அடுத்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தீபக்ராஜை பிடித்து சோழத்தரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சோழத்தரம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணுவவீரர் தீபக்ராஜை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...