இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பல்லி விழுந்த உணவால் பள்ளியில் பீதி

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் அரசு உதவியுடன் இயங்கும் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 65 மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில்

News image
Updated On :1 ஜூலை 2013, 10:29 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் தங்கி படிக்கும் விடுதியில் இன்று காலை வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்து இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் அரசு உதவியுடன் இயங்கும் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 65 மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை இந்த மாணவிகளுக்கு எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டுள்ளது. மாணவிகள் சாப்பிட உட்கார்ந்து இருந்த போது அப்போது சிந்து என்ற 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது சாப்பாட்டில் பல்லி விழுந்து இருந்ததை பார்த்து கூறியதை தொடர்ந்து பிற மாணவிகள் சாப்பிடுவதை நிறுத்தினர்.

தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தார் மாணவிகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிகள் நல்ல உடல் நலனுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து மாணவிகள் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டனர்.இந்நிலையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவிகள் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர் என்று வதந்தி பரவியதை தொடர்ந்து ஆரம்பாக்கம் போலீஸார், வருவாய் துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லேகாஸ்ரீ தலைமையில் மருத்துவக்குழுவினரும் பள்ளிக்கு விரைந்து மாணவிகளை பரிசோதித்ததில் மாணவிகள் அனைவரும் பள்ளி விழுந்த உணவை சாப்பிடவில்லை என்றும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்றும் சொன்னதை தொடர்ந்து பதட்டம் தணிந்தது.இது குறித்து கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ் தெரிவிக்கையில் மாணவிகளுக்கு தயாரிக்கப்பட்ட எலுமிச்சை சாதத்தில் பள்ளி விழுந்திருந்தாலும் அந்த உணவை யாரும் சாப்பிடவில்லை, உணவில் பல்லி இருந்ததை கேள்விப்பட்டு மாணவிகள் சிலர் அருவருப்பில் வாந்தி எடுத்துள்ளனர். மாணவிகள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.