இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டாஸ்மாக் குடோன் ஊழியர் கோவில் குளத்தில் சேற்றில் சிக்கி பலி

கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் வசந்தகுமார். இவர் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் குடோனில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வசந்தி(31) என்ற மனைவியும்,

News image
Updated On :23 ஜூன் 2013, 10:10 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள எல்லையம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்ற டாஸ்மாக் குடோன் ஊழியர் வசந்தகுமார்(37) சேற்றில் சிக்கி இன்று பலியானார்.

கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் வசந்தகுமார். இவர் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் குடோனில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வசந்தி(31) என்ற மனைவியும், லோக்நாத்(11), ரூபன்(7) என்ற மனைவியும் உள்ளனர்.வசந்தகுமாரின் தம்பி மகன்களுக்கு புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள குலதெய்வ கோவிலான எல்லையம்மன் கோவிலில் இன்று மொட்டை அடித்து காது குத்த ஏற்பாடுகள் நடைபெற்ற வந்த நிலையில் , இன்று காலை அந்த வேலைகளை பார்க்க கோவிலுக்கு சென்ற வசந்தகுமார், கோவில் குளத்தில் குளிக்க உள்ளே இறங்கினார்.

அப்போது அவர் குளத்தில் சேறான பகுதியில் சிக்கி உள்ளே மூழ்கினார். அப்போது அருகில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற இயலவில்லை. தொடர்ந்து குளத்தில் குளிக்க போனவரை காணாது அவரது உறவினர்கள் தேடியும் கிடைக்காமல் தீயணைப்பு துறையினர் வந்து குளத்தில் இருந்து வசந்தகுமாரின் உடலை மீட்டனர்.சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் முனிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதே குளத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 3 இளம்பெண்கள் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.