இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற இருவர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற அதே ஊரை சேர்ந்த சந்திரன்(41), ஆனந்தன்(31) ஆகிய இருவரும் பாதிரிவேடு போலீஸாரால் இன்று கைது

News image
Updated On :25 ஜூன் 2013, 10:19 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற அதே ஊரை சேர்ந்த சந்திரன்(41), ஆனந்தன்(31) ஆகிய இருவரும் பாதிரிவேடு போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் ஆந்திர மாநில மதுபான பாட்டில்களை சிலர் விற்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்களின் சார்பாக புகார் சென்றது. இதனை ஒட்டி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பாதிரிவேடு போலீஸார் சாணாபுத்தூர் பகுதியில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது சாணாபுத்தூர் ஏரிக்கரையோரம் ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற சாணாபுத்தூரை சேர்ந்த செல்லதுரை மகன் சந்திரன், கிருஷ்ணன் மகன் ஆனந்தன் பாதிரிவேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.நிகழ்வின் போது சந்திரனிடம் இருந்து 50 குவார்ட்டர் பாட்டில்களும், ஆனந்தனிடம் இருந்து 25 குவார்ட்டர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள பாதிரிவேடு போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.