இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெண்மணியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் இருவர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த கனகவல்லி(55) நேற்று(வியாழக்கிழமை) தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக

News image
Updated On :28 ஜூன் 2013, 9:09 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த கனகவல்லி(55) நேற்று(வியாழக்கிழமை) தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பார்த்திபன், சீனிவாசன் ஆகிய இருவரை கவரப்பேட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த விவசாயி பொன்னுரங்கத்தின் மனைவி கனகவல்லி. பொன்னுரங்கத்திற்கும் அவரது அண்ணன் செல்வராஜிற்கும் கடந்த 2 வருடமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் அடிக்கடி வாய்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) மாலை இதே பிரச்சனை எழுந்த போது செல்வராஜின் மகன்கள் பார்த்திபன் மற்றும் சீனிவாசன் பொன்னுரங்கத்தின் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த கனகவல்லியிடம் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த கனகவல்லி வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து உண்டதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். தொடர்ந்து பார்த்திபன் மற்றும் சீனிவாசன் தகாத வார்த்தைகளால் பேசியதால் தான் கனகவல்லி மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும், அவரை தற்கொலைக்கு காரணமான இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கனகவல்லியுின் மகன் முனிவேல் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள கவரப்பேட்டை போலீஸார் தலைமறைவாகி உள்ள பார்த்திபன் மற்றும் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.