ஓய்வு பெற்ற போலீஸாரின் சேமநலநிதி கையாடல் தொடர்பாக எஸ்பி அலுவலக நிதிப்பிரிவு ஊழியர்கள் 3 பேரை பணி இடைநீக்கம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸாக்கு சேரவேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை ஆகிய பணபலன்கள் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு செந்தில்குமார், பண்ருட்டி போலீஸ்காரர் முரளி ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்னையில் தொடர்புடைய எஸ்பி அலுவலக நிதிப்பிரிவு பணியாளர்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் இப்பிரச்னை தொடர்பாக எஸ்பி அலுவலக நிதிபிரிவில் பணியாற்றும் கண்காணிப்பாளர் முருகன்(55), காசாளர் ராஜாராமன்(48), இளநிலை உதவியாளர் கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராமானுஜா் 1009-வது ஜெயந்தி விழா

ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்
சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

