நாட்டியாஞ்சலியில் புதுச்சேரி தானியா கனக மகாலட்சுமி, மயிலாடுதுறை உமாமகேஸ்வரி, தஞ்சாவூர் சாருமதி சந்திரசேகரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக இசை மற்றும் நாட்டியத்துறை மாணவர்கள், யுஎஸ்ஏவைச் சேர்ந்த ஸ்வாதி பிசே, சென்னை கவிதாராமு ஆகியோரின் பரதம், ஹைதராபாத் மிகிராபாதுரி கூச்சுப்புடி நடனம், புதுதில்லி ரஞ்சனா கெளஹார் ஓடிஸி நடனம், பெங்களூரு ருக்குமணி விஜயகுமாரின் பரதம், சென்னை டாக்டர் வி.ராகவன் நிகழ்கலை மையம் வழங்கும் சிவ ஆனந்த யோகம் என்ற பரதம், யுஎஸ்ஏ மைதிலிகுமார், ரசிகா குமார், சென்னை சுதாராணி ரகுபதி மாணவியர் வழங்கும் கருத்தாண்டவர் என்ற பரதம், மஸ்கட்டைச் சேர்ந்த பத்மினி கிருஷ்ணமூர்த்தி, மும்பை பண்டிட் நரேஷ்பிள்ளை, சேலம் ரமாதேவி மாணவியர்கள், சென்னை கற்பகவல்லி ஜெயக்குமார், திருவனந்தபுரம் சஞ்சனாஅருண், சென்னை ராதிகா கல்யாணி, பெங்களூர் பூர்ணிமா நவீன்குமார், சென்னை நிருத்யதாரா மாணவியர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாசிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய நாட்டியாஞ்சலியின் முதல்நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு முடிவுற்றது.