இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் : மனைவி மீதான சந்தேகத்தால் மண்வெட்டியால் வெட்டிய கணவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை, மண்வெட்டியால் வெட்டி காயப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :11 டிசம்பர் 2014, 4:52 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை, மண்வெட்டியால் வெட்டி காயப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை-மாலைபட்டியைச் சேர்ந்தவர் வைரமுத்து (45). இவரது மனைவி சங்கரம்மாள் (35). இருவரும் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. மனைவியின் நடத்தையில் வைரமுத்து சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பிரச்னையில் மனைவி சங்கரம்மாளை வைரமுத்து மண்வெட்டியால் தலையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமுற்ற அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.