ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: ஒருவரிடம் விசாரணை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடு போயுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ராஜபாளையம்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் மூன்று மோட்டார் சைக்கிள்களை திருடு போயுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ராஜபாளையம் போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
சிவகாசி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்றல் நகரைச் சேர்ந்தவர் அ.அர்ஜூன் (20). இவர் சனிக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலைக்கு சுவாமி கும்பிட வந்துள்ளார். வாகனத்தை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு சுவாமி கும்பிட்டு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. இது தொடர்பாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம், வீரப்பபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மா.முத்துச்சாமி (24). இவர் சனிக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் திருண்ணாமலை கோவிலுக்குச் சென்றுள்ளார். மலை அடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்து பார்த்த போது வாகனத்தைக் காணவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ராஜபாளையம் அருகேயுள்ள கிழவிகுளத்தைச் சேர்ந்தவர் பெ.அய்யனார் (32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கீழரதவீதியிலிருந்து ஆண்டாள் கோவிலுக்குச் செல்லும் பாதையில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சுவாமி கும்பிடச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வாகனத்தைக் காணவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். மூன்று புகார்களின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ராஜபாளையம் குற்றப்பிரிவு போலீஸார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...