இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

லாரி ஏறியதில் தூங்கிக் கொண்டிருந்தவர் உடல் நசுங்கி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் முனியாண்டி (45). சலவைத் தொழிலாளியான இவர், இங்குள்ள தனியார் நூற்பு ஆலை அருகே தூங்கிக்

News image
Updated On :14 டிசம்பர் 2014, 10:48 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தூங்கிக் கொண்டிருந்தவர் மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி மகன் முனியாண்டி (45). சலவைத் தொழிலாளியான இவர், இங்குள்ள தனியார் நூற்பு ஆலை அருகே தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது லோடு ஏற்றிய லாரி நூற்பு ஆலைக்கு வந்துள்ளது. டிரைவர் திருச்சி, துறையூர், ரெங்கநாதசுபரம் ஜெ.தாமோதரன் (43) லாரியை பின்னால் எடுத்துள்ளார். அப்போது படுத்து தூங்கிக் கொண்டிருந்த முனியாண்டி மீது லாரி ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கு.மாரியப்பன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் தாமோதரனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.