இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மாதத்திற்கு அவ்வப்போது 1-3 மணி நேரம் மின்தடை ஏற்படும்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் மின் இழப்புகளை குறைக்கவும், எதிர்கால மின் தேவையை சமாளிக்கும் வகையிலும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று

News image
Updated On :17 டிசம்பர் 2014, 2:06 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் மின் இழப்புகளை குறைக்கவும், எதிர்கால மின் தேவையை சமாளிக்கும் வகையிலும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் எதிர் வரும் ஒரு மாதத்திற்கு தினமும் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின் தடை ஏற்படும் என்றும், பொதுமக்கள் இப் பொது நலப் பணிக்கு ஒத்துழைப்பு தந்து  சிரமத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோட்ட செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போதுள்ள மின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மின் வழித்தடத்தில் மின் இழப்புகளைக் குறைக்கவும், எதிர்கால மின் தேவையை சமாளிக்கும் விதமாகவும் மத்திய அரசின் R-APDRP என்ற திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 118 நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியும் இடம் பெற்றுள்ளது.சுமார் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் இப் பணிகள் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இப் பணிகளை செய்யும் போது சில நேரங்களில் மின்னோட்டம் செல்லும் பாதைகளில் மின்சாரத்தைத் தடை செய்து மேம்பாட்டுக்கான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு அவ்வப்போது 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்தடை (நிறுத்தம்) ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. முடிந்த அளவு இந்த மின் நிறுத்த நேரத்தை குறைத்துப் பணிகள் செய்ய எல்லா முயற்சிகளும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் எடுக்கப்படுகிறது. எனினும் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் மின்சாரம் தொடர்பான பணிகளைச் செய்ய வேண்டியுள்ளதால் சில சமயம் மின்தடை ஏற்படுவது தவிர்க்க முடியாது போகிறது. எனவே பொதுமக்கள் இதுபோல் ஏற்படும் சில மணி நேர மின் தடங்கல்களைப் பொறுத்துக் கொண்டு, நமது ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுப் பகுதியின் எதிர்கால மின் தேவைகளை பூர்த்தி செய்யும் இப் பொது நலப் பணிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.