ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் திருட்டு: 4 டிராக்டர்கள் பறிமுதல்: இருவர் கைது


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவி்ல்லிபுத்தூரில் அரசு அனுமதியின்றி மண் திருட்டில் ஈடுபட்ட 4 டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் செங்கல் சூளைக்கு தொடர்ச்சியாக மண் திருடப்பட்டு வருகிறது. மம்சாபுரம் சாலையில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் மண் திருட்டு நடைபெறுவதால், பனை மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்து கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 1 மாதம் இந்த சாலையில் மம்சாபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு போலீஸார் பகல் மற்றும் இரவில் இருந்து சோதனைச் சாவடி அமைத்து செயல்பட்டனர். அப்போது மண் திருட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. பல்வேறு அழுத்தம் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் இந்த சோதனைச் சாவடியை விலக்கிக் கொண்டார். இதனையடுத்து மண் திருட்டு தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது.
காவல் சார்பு ஆய்வாளர் மோகன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாகனத் தணிகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டார். அதில் உரிய அரசு அனுமதியின்றி மண் திருடி வந்தது தெரிய வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து டிரைவர் சீ.ராசு (37) என்பவரைக் கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டிராக்டர் உரிமையாளர் பாலமுருகனை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஆராய்ச்சிபட்டி ஓடை அருகே சார்பு ஆய்வாளர் மோகன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அரசு அனுமதியில்லாமல் மண் திருடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிரைவர் சீ.கணேசன் (36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமையாளர் செல்லக்கண் என்பவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவதை அறிந்து மண் திருடி வந்த டிராக்டரை குலாளர் தெரு பாலம் அருகே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அதேபோல், நரிப்பாறை கண்மாயில் மண் திருடிய டிராக்டரையும் டிரைவர் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த இரு டிராக்டர்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபு்ததூர் நகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். வண்டியின் பதிவு எண்ணை வைத்து இது யாருடையது என்று போலீஸா்ர விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...