புனித அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் கிறிஸ்துமஸ் விழா
ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எஸ்.ஐ. திருச்சபை சார்பில் நடைபெற்று வரும் புனித அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் கிறிஸ்துமஸ் விழா கிருபை கிரியை உதவிக் கரங்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எஸ்.ஐ. திருச்சபை சார்பில் நடைபெற்று வரும் புனித அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் கிறிஸ்துமஸ் விழா கிருபை கிரியை உதவிக் கரங்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.
மையத்தின் தாளாளரும், கிருபை கிரியை உதவிக் கரங்கள் அமைப்பின் நிறுவனருமான ஆர்.ஏசுதாஸ் முத்தையா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜி.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார். வத்திராயிருப்பு சி.எஸ்.ஐ. திருச்சபையின் சபைகுரு அருள்திரு ஜான் கமலேசன் விழாவை ஜெபித்து தொடங்கி வைத்தார்.
மதுரை, டி.வி.எஸ். மருத்துவமனையில் டாக்டர் தயாளன் கைவிடப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோர் என 350 பேருக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி தேவ செய்தியளித்தார்.
தமிழாசிரியை ஜாய்ஸ், அத்திகுளம் சபைகுரு கிறிஸ்டோபர், ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எஸ்.சார்லஸ் மனோகரன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவர்களின் பல்வேறு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பிரேம் சீனிவாசகன், பிரேம்தாஸ், வசந்தி, ஜெபராஜ், சின்னப்பன், குமார், செபஸ்தியான், சீமோன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...