இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அத்யயன உற்சவம் இன்று தொடக்கம்

திருமங்கை மன்னன் பெரியபெருமாளிடத்தில் திருவாய்மொழிக்கு வேத ஸாம்யத்தை பிரார்த்தித்துப் பெற்ற அந்த உத்ஸவத்தை ஸாங்கோபாங்கமாக நடத்தக் கருதி சிறிய திருஅத்யயன உற்சவம்

News image
Updated On :22 டிசம்பர் 2014, 1:39 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் 25 நாட்கள் நடைபெறும் அத்யயன உற்வசம் திங்கள்கிழமை தொடங்கியது.

திருமங்கை மன்னன் பெரியபெருமாளிடத்தில் திருவாய்மொழிக்கு வேத ஸாம்யத்தை பிரார்த்தித்துப் பெற்ற அந்த உத்ஸவத்தை ஸாங்கோபாங்கமாக நடத்தக் கருதி சிறிய திருஅத்யயன உற்சவம் (பகல்பத்தும்) பெரிய திருஅத்யயன உற்சவம் (ராப்பத்தும்) பெரியாழ்வார் திருமகளான அந்த ஸ்ரீஆண்டாள் அனுசரித்து அனுபவித்ததை பிற்காலத்திலும் அடியார்கள் சேவித்து உய்வு பெறுவதற்கும் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை காலை ஸ்ரீஆண்டாள்-ரெங்கமன்னார் புறப்பாடு நடைபெற்று திருவோண மண்டபம் சேருதலும், ஸ்ரீபெரிய பெருமாள் மற்றும் ஆழ்வார்கள் மண்டபம் சேருதலும் நடைபெற்றது. பகல் 1 மணிக்கு திருத்திரை வாங்குதல் மற்றும் அரையர் வியாக்யானம் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் இந்த பகல்பத்து உற்சவம் நடைபெறும்.

மாலை ஸ்ரீஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேதப்பிரான்பட்டர் திருமாளிகையில் சுவாமிகள் பச்சைப் பரப்பக் கடாக்ஷித்து திருவோண மண்டபம் சேர்தல் நடைபெற்றது. இரவு ஆழ்வார்கள் திருவோண மண்டபம் சேர்ந்து திருத்திரை வாங்குதல் நடைபெற்று, திருவாராதனம், கோஷ்டி அருளிப்பாடு திருப்பல்லாண்டு வியாக்யானம் நடைபெற்றது. ஸ்ரீபெரியபெருமாள் பத்தி உலாவுதல் நடைபெற்று சுவாமிகள் மூலஸ்தானம் சேருதல் நடைபெற்றது.

1.1.2015-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 7.40 மணிக்கு பரமபதவாசல் திருப்பு நடைபெறுகிறது. அன்றைய தினம் தொடங்கும் இராப்பத்து உற்சவம் 11.1.15-ம் தேதி முடிய நடைபெறும்.ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி  15-ம் தேதி நிறைவடையும்.

உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.