இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மம்சாபுரம் பேரூராட்சியில் 50 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :31 டிசம்பர் 2014, 9:40 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எம்.குணசேகரன், மம்சாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வழியே இரு சக்கர வாகனத்தில் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட திண்பண்டங்களுடன் வியாபாரத்திற்குச் சென்ற நபர்களையும் நிறுத்தி அவர் சோதனையிட்டார். மொத்தம் 50 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், வியாபாரிகளை உதவி இயக்குநர் எச்சரிக்கை செய்து, பாலித்தீன் பொருட்களின் கொடுமை குறித்து விளக்கினார்.

ஆய்வின் போது உடன் செயல் அலுவலர் சித்திரைக்கனி உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.