/

மது கடத்தியதாக 2 பேர் கைது: மதுபாட்டில்கள் பறிமுதல்

தெள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் சீராளன் தலைமையில் தெள்ளாறு போலீஸார் வந்தவாசி-திண்டிவனம் சாலை, சு.காட்டேரி அருகே திங்கள்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக

News image
Updated On :13 மே 2014, 9:43 am

கணேஷ்கிரி

வந்தவாசி அருகே மது கடத்தியதாக 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

தெள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் சீராளன் தலைமையில் தெள்ளாறு போலீஸார் வந்தவாசி-திண்டிவனம் சாலை, சு.காட்டேரி அருகே திங்கள்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை சோதனை செய்வதற்காக நிறுத்தும்படி கூறினர். ஆனால் பைக்கில் வந்த இருவர் நிற்காமல் வேகமாக சென்றனர். இதையடுத்து அவர்களை துரத்திய போலீஸôர் தெள்ளாறு அருகே மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்கள் இருவரும் புதுவையிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. மேலும் இருவரும் திருவள்ளூர் மாவட்டம் சின்னமுடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன்(23), விழுப்புரம் மாவட்டம் சிறுவள்ளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(23) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து முரளிகிருஷ்ணன், செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த தெள்ளாறு போலீஸார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 73 மதுபாட்டில்கள், பைக் ஆகியவற்றை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.