ஸ்ரீவில்லிபுத்தூரில் திருட்டு மணல் அள்ளிய வழக்கு: 10 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பகுதியில் சிவகாசி சார் ஆட்சியர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட 10 நபர்கள்,


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பகுதியில் சிவகாசி சார் ஆட்சியர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட 10 நபர்கள், அவர்கள் ஓட்டி வந்த மாட்டு வண்டிகள், 20 காளைகள் பறிமுதல் செய்யப்பட்டது.சிவகாசி சார் ஆட்சியருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தது. இதன் பேரில் வத்திராயிருப்பு பகுதியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை அருகே மணல் திருடி வந்த 5 மாட்டு வண்டிகள் பிடிபட்டன. இதனை வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சேர்ந்த மு.ஆளடியான் (50), பி.மணிகண்டன் (28), பி.காளியப்பன் (40), கு.முத்தையா (25), மு.ராஜா (21) ஆகியோர் ஓட்டி வந்தனர்.
பின்னர் கூமாப்பட்டி பெரியகுளம் கண்மாய் பகுதியில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 5 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த ரா.கருப்பையா (45), கு.பரமசிவம், சு.குருவு (40), மா.கோச்சடை (50), நெடுங்குளம் பெ.பாண்டியராஜன் ஆகியோரை வருவாய்த் துறையினர் பிடித்தனர்.இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைத்துரை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆளடியான் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் 5 டயர் மாட்டு வண்டிகள், 10 காளைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கூமாபட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கருப்பையா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, 5 டயர் மாட்டு வண்டிகள் மற்றும் 10 காளைகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...