விருதுநகர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் 8 பேர் இடமாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் 8 பேரை இடமாற்றம் செய்யது மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


விருதுநகர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் 8 பேரை இடமாற்றம் செய்யது மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனி வட்டாட்சியராகப் பணியாற்றிய எம்.ரெங்கசாமி அருப்புக்கோட்டை வட்டாட்சியராகவும், அருப்புக்கோட்டை வட்டாட்சியராகப் பணியாற்றிய கநதவேல்குமார், சாத்தூர் (நத்தம் நிலவரித் திட்டம்) தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காரியாபட்டி வட்டாட்சியர் வ.பொன்ராமர் விருதுநகர் சிப்காட் தனி வட்டாட்சியராகவும், சாத்தூர் (நத்தம் நிலவரித் திட்டம்) தனி வட்டாட்சியராகப் பணியாற்றிய அ.பால்துரை விருதுநகர் வட்டாட்சியராகவும், விருதுநகர் (அகதிகள்) தனி வட்டாட்சியர் மா.சிவஜோதி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், விருதுநகர் வட்டாட்சியராகப் பணியாற்றிய ஆர்.ராஜா விருதுநகர் (அகதிகள்) தனி வட்டாட்சியராகவும், சிப்காட் தனி வட்டாட்சியராகப் பணியாற்றிய எஸ்.சம்பத்குமார் ராஜபாளையம் தனி வட்டாட்சியராகவும், விருதுநகர் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகப் பணியாற்றிய ஆர்.வள்ளி காரியாபட்டி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...