இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியதாக 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியதாக 5 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :15 ஏப்ரல் 2015, 3:37 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணை ஏமாற்றியதாக 5 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி ஷெரினா (27). இவருக்குச் சொந்தமான 200 பவுன் தங்க நகைகள் அடமானத்தில் இருந்துள்ளது. இதனை திருப்ப முடியாத சூழ்நிலையில் இருந்தபோது மாரிமுத்து என்பவர் மார்ச் 2009-ல் அறிமுகமாகியுள்ளார். பின்னர் ஷெரினாவுடன் மாரிமுத்து நெருங்கி பழகியுள்ளார். தனது மனைவியுடன் வாழப்பிடிக்காமல், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாயும் மாரிமுத்து கூறியுள்ளார். மேலும் நகைகளை திருப்பித் தருவதாயும் கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக மாரிமுத்துவுடன் ஏற்பட்ட உறவினை அடுத்து 14.9.13-ம் தேதி ஷெரினாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மாரிமுத்து, ஷெரினாவை தனியாக ஒரு வீட்டில் குடியிருக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் மாரிமுத்து, உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. உடனே வீட்டை காலி செய்துவிட்டு போய்விடு என்று கூறி துன்புறுத்தினாராம்.இது தொடர்பாக மாரிமுத்துவிடம் போய் ஷெரினா கேட்டபோது, ஷெரினாவை மாரிமுத்து அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் சேர்ந்து சதி செய்து மிரட்டினார்களாம். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஷெரினா புகார் செய்தார்.

இப் புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் மாரிமுத்து, அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.